வந்தவாசியில் வாக்கு சேகரிக்க சென்ற பாமக வேட்பாளரை விடுதலை சிறுத்தை கட்சியினர் தடுத்ததால் அதிமுக - விசிக இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வந்தவாசி தொகுதி அதிமுக கூட்டணி கட்சி பாமக வேட்பாளர் முரளி சங்கர் வந்தவாசி கோட்டை காலனி பகுதியில் பரப்புரை மேற்கொள்ள சென்றார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மைக்கை ஆஃப் செய்து விட்டு பரப்புரை மேற்கொள்ளுங்கள் என பாமக வேட்பாளரை வாக்கு சேகரிக்க விடாமல் தடுத்து நிறுத்தியதாக சொல்லப்படுகிறது.
இதனால் அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்த வந்தவாசி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தங் ராமன் மற்றும் வந்தவாசி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று வாக்கு சேகரிக்க விடாமல் தடுத்து நிறுத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை அப்புறப்படுத்தினர்.
பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் பாமக வேட்பாளர் முரளிசங்கர் வாக்கு சேகரித்தார். இதனால் வந்தவாசி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.