அ.தி.மு.க.வில் எந்த அணியிலும் இல்லை என்று அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ ரத்தின சபாபதி கூறினார்.
அதிமுகவில், எடப்பாடி பழனிசாமி இருந்தவர், அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ ரத்தின சபாபதி. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்த பி.கே. வைரமுத்துவை பதவியில் இருந்து டி.டி.வி.தினகரன் நேற்று விடுவித்து அறிவிப்பு வெளியிட்டார். அவருக்கு பதிலாக புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பதவி, மணல்மேல்குடி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பரணி கார்த்திகேயனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதியின் சகோதரர்.
இந் நிலையில் எடப்பாடி அணிக்கு ஆதரவு அளித்த வந்த ரத்தினசபாபதி, தினகரன் அணிக்கு தாவப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி ரத்தின சபாபதி எம்.எல்.ஏ கூறும்போது, ‘அதிமுகவின் எந்த அணியிலும் நான் இல்லை. சசிகலா, தினகரனை விலக்கிவிட்டு ஆட்சியை நடத்த முடியாது. சட்டப்பூர்வமாக அனைவரும் ஒன்றிணைந்து பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த சசிகலாவை விலக்க, ஏன் முயற்சிக்கிறார்கள்?. எம்.எல்.ஏக்களை கலந்தாலோசிக்காமல், 6 பேர் மட்டுமே கூடி முக்கிய முடிவுகளை எடுக்கிறார்கள்’ என்றார்.