காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், காவிரி விவகாரத்தில் பிரதமர் சந்திக்க மறுப்பதாக முதல்வர் தெரிவித்ததாக கூறினார். மேலும் பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் கூண்டோடு தமிழக எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் கூறியிருக்கிறார். மு.க.ஸ்டாலின் இந்த கருத்து பற்றி நீங்கள் நினைப்பது என்ன..?