ரஜினிகாந்த் கட்சிக்கு கொள்கை, திட்டங்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து கடந்த மாதம் டிசம்பரில் அறிவித்தார். ரசிகர்களுடனான சந்திப்பின் போது தான் அரசியலுக்கு வருவர்து உறுதி என்றும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார். ’கொள்கை என்ன தலைவரே’ என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ’ஒரு நிமிஷம் தலை சுத்துது’ என்று பதிலளித்தார். ரஜினியின் கட்சிப்பெயர், கொடி குறித்து எந்த அறிவிப்பும் இல்லாமல் இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் என்ற பெயரை, ரஜினி மக்கள் மன்றம் என மாற்றினார். புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்காக இணையதளத்தையும் தொடங்கினார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் கட்சிக்கு கொள்கை, திட்டங்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.ரஜினிகாந்த் மக்கள் இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை பணியை தீவிரப்படுத்த ரஜினிகாந்த் நாளை அறிக்கை வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
கட்சி பெயர், கொடி அறிவிப்பு நாளை இல்லை என்றும் விரைவில் மதுரை அல்லது கோவையில் ரசிகர்களை அழைத்து பிரமாண்ட மாநாடு நடத்தி அறிவிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.