anitha sampath instagram
டிரெண்டிங்

சப்ஸ்கிரிப்ஷன் மூலம் பணம்! ஆதரவாக பேசிய இளம்பெண்! வெளுத்து வாங்கிய அனிதா சம்பத்!

இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன் மூலமாக பணம் பெறுவது சரி என்று கூறிய பெண் ஒருவருக்கு, பிரபல செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் பதிலடி கொடுத்துள்ளார்.

PT WEB

செய்தியாளர் - கார்த்திகேயன்

இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்துள்ள பெண் மற்றும் ஆண் இன்புளுயன்சர்கள், விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள். இதுமட்டுமின்றி, சப்ஸ்கிரிப்ஷன் என்ற முறையின் மூலமும், வருவாயை ஈட்டி வருகிறார்கள். அதாவது, ஃபாலோவர் ஒருவர் தனது இன்புளுயன்சர்-க்கு குறிப்பிட்ட பணம் ஒன்றை மாதந்தோறும் செலுத்துவார். அவ்வாறு பணம் செலுத்தும் ஃபாலோவர்களுக்கு மட்டும் சில Exclusive ஆன கண்டென்டுகளையும், புகைப்படங்களையும், அந்த இன்புளுயன்சர்கள் வழங்குவார்கள். இந்த சப்ஸ்கிரிப்ஷன் மாடலை பயன்படுத்தி, ஒரு சில பெண் இன்புளுயன்சர்கள் தங்களது ஆபாசமான புகைப்படங்களை விற்பனை செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

இதுகுறித்து பிரபல விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பெண் ஒருவர், சப்ஸ்கிரிப்ஷன் மூலம் பெண்கள் பணம் சம்பாதிப்பது சரி என்று கூறியிருந்தார். மேலும், இது ஒரு வியபாரம். தேவை இருப்பதால், இதனை செய்ய வேண்டிய சூழல் உள்ளது. நான் ஒரு ஆடையை அணிந்து புகைப்படம் வெளியிடுகிறேன். அதனை பார்க்க பணம் செலுத்துகிறார்கள் என்றால், அது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம். இது என் ஆடை சுதந்திரம். ஒரு பெண் இவ்வாறு பணம் சம்பாதிப்பதால், வேறு யாருக்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படப்போவதில்லை என்று கூறியிருந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், இன்ஸ்டாகிராம் பிரபலமும், முன்னாள் செய்தி வாசிப்பாளருமான அனிதா சம்பத், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

anitha sampath

அதில், “ஆடை சுதந்திரமும், சப்ஸ்கிரிப்ஷன் மூலம் பணம் சம்பாதிப்பதும் எப்படி ஒரே விஷயமாக மாறியது. இது ஒரு வியாபாரம் என்றால், பெண் குழந்தைகள் ஏன் பள்ளிக்கும், கல்லூரிக்கும் அனுப்ப வேண்டும். 7 ஆயிரம் சம்பளத்துக்கு ஏன் பெண்கள் கடுமையாக உழைக்க வேண்டும். வெறும் 3 ஆயிரம் சம்பளத்துக்கு, ஏன் வீட்டு வேலை செய்ய வேண்டும். ஏன் கடினமான Exam-களுக்கு படிச்சு தயாராக வேண்டும். இது ஆன்லைனில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை, மிகவும் சாதாரணமான விஷயமாக மாற்ற முயற்சிக்கும் செயலாக உள்ளது” என்று விமர்சித்தார்.

பெண்களை போகப்பொருளாக பார்க்கும் போக்கு காலம் காலமாக தொடரும் நிலையில் தற்போது வியாபாரம் என்ற பெயரில் அதனை பெண்களே கையில் எடுத்திருப்பது, கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்று கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள், அனிதா சம்பத்தின் இந்த தைரியமான பதிவுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.