Anirudh Instagram
டிரெண்டிங்

அனிருத்தை விமர்சிக்கும் நெட்டிசன்கள்.. வைரல் ஆகும் ட்ரோல்கள்.. நடந்தது என்ன?

’அரசன்’ படத்தின் புதிய புரோமோவில் இடம்பெற்ற புதிய தீம் மியுசிக்கால் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர் - கார்த்திகேயன்

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். இவருக்கும், சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுக்கும், நவம்பர் 11-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமண சந்தோஷத்தில் அனிருத் இருந்து வரும் சூழ்நிலையில், நெட்டிசன்களும், சிம்புவின் ரசிகர்களும் அவரை விமர்சித்தும், கிண்டலடித்தும், வருகிறார்கள். அதாவது, வெற்றிமாறன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் ’அரசன்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. வடசென்னை யுனிவெர்ஸில் நடைபெறும் கதை என்பதாலும், சிம்பு-வெற்றிமாறன் கூட்டணி முதல்முறையாக இணைவதாலும், இந்த படத்தின் மீது, பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. குறிப்பாக, இந்த படத்தின் முதல் புரோமோ வெளியானபோது, பல்வேறு ரசிகர்கள் கமெண்ட்ஸ்-ல் ஃபயர் விட்டு உற்சாகத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

anirudh

இது சிம்புவின் திரைப் பயணத்தில் நிச்சயம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டாக அமையும் என்றும், பலரும் தொடர்ந்து கூறி வந்தனர். இந்நிலையில், இந்த திரைப்படத்தின் புதிய ப்ரோமோ வீடியோவை, படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். அதில், கெத்தான தோற்றத்துடன் கம்பீரமாக சிம்பு நடந்து வருவதுபோல் காட்சி இடம்பெற்றுள்ளது. ஆனால், பல்வேறு விஷயங்களை கச்சிதமாக செய்த படக்குழு, அந்த படத்தின் பின்னணி இசையில் பெருமளவில் கோட்டை விட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

2-வது புரோமோவில் இடம்பெற்ற ஃபயரு என்ற புதிய தீம் மியூசிக்கைக் கேட்ட பல்வேறு ரசிகர்கள், கமெண்ட்ஸ் பக்கத்தில் புலம்பி வருகின்றனர். வீடியோவில் இடம்பெற்ற மியூசிக்கைப் பார்த்த ரசிகர்கள், இது ஃபேன் மேட் மியூசிக்காக இருக்கலாம் என்றும், இது அனிருத் மியூசிக்கே இல்லை என்றும் கருத்து தெரிவித்து வந்தனர்.

அந்த அளவிற்கு, இந்த புதிய புரோமோவில் இடம்பெற்ற பாடல் பலரையும், கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளது. இதையொட்டி, பல்வேறு மீம்ஸ் வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு, ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். தீபாவளி விடுமுறையில் நல்ல விதமாக டிரெண்டிங் ஆகலாம் என்று நினைத்திருந்த படக்குழுவினருக்கு, இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.