டிரெண்டிங்

ஓட சிரமப்படுகிறாரா? - பிட்னஸ் பிரச்னையில் சிக்கிய ஆண்ட்ரே ரஸ்ஸல்!

ஓட சிரமப்படுகிறாரா? - பிட்னஸ் பிரச்னையில் சிக்கிய ஆண்ட்ரே ரஸ்ஸல்!

jagadeesh

பெங்களூர் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் கொல்கத்தா அணியின் ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸலின் செயல்பாடுகள் அவரது உடற்தகுதி குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் நேற்றையப் போட்டியில் பெங்களூர் - கொல்கத்தா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் ஆண்ட்ரே ரசல் 20 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். ஆனால் இந்தப் போட்டியில் ஆண்ட்ரே ரசலின் உடற் தகுதி பெறும் விவாதமாக உருவெடுத்துள்ளது.

இந்தப் போட்டியில் பெங்களூர் ஆட்டக்காரர் ஜேமிசனை எளிதாக ரன் அவுட் ஆக்கி இருக்கலாம். ஆனால் கையில் பந்து இருந்தபோதும் அதனை ஸ்டம்பில் ஓடிச்சென்று அடிக்காமல் வெறுமனே நின்றிருந்தார் ரஸ்ஸல். இதனை பார்த்த ரசிகர்கள் பலர் ரஸ்ஸலால் ஓட முடியவில்லை, அடுத்தப் போட்டியில் அவரை அணியில் சேர்க்க கூடாது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். அதில் "ஆண்ட்ரே ரஸ்ஸல் போன்ற சூப்பர் ஸ்டார் உங்கள் அணியில் இருக்கிறார். ஆனால் பீல்டிங்கின்போது பந்து அவர் அருகே வரும்போது குனிந்து எடுக்காமல் கால்களால் தடுக்கிறார். அவரால் கீழே குனிய முடியவில்லை என்பதுதான் உண்மை. இவரை எப்படி கொல்கத்தா கேப்டன் மார்கன் திறமையாக சமாளிக்கப் போகிறார் என்பதுதான் தெரியவில்லை" என்றார்.

மேலும் "ரஸ்ஸல் பவுலிங் செய்யும்போதும், பீல்டிங் செய்யும்போதும் மட்டும் திணறவில்லை. பேட்டிங்கின் போது இரண்டாவது ரன்னை அவரால் ஓடி எடுக்க முடியவில்லை. மிகவும் சிரமப்படுகிறார். டி20 போட்டிகளில் இருக்கும் அனைத்து வீரர்களும் பீல்டிங்கின்போது நல்ல உடற்தகுதியுடன் இருக்க வேண்டும். அந்த வகையில் ரஸ்ஸலுக்கு இப்போதைக்கு போதிய உடற் தகுதி இருப்பதாக எனக்கு தெரியவில்லை" என்றார் மைக்கல் வாகன்.