நீட்டுக்கு எதிராக தமிழகமெங்கும் போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போது, மறுபுறம் அரசியல் நிகழ்ச்சிகளை நடத்தி, அதிமுகவினர் குறைந்தபட்ச நாகரிகம் கூட இன்றி நடந்து கொள்வதாக நடிகர் ஆனந்தராஜ் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " ஒருபுறம் போராட்டம் நடக்கிறது. இன்னொரு புறம் அரசாங்க நிகழ்ச்சிகள். இது ஒரு பழுத்த, புழுத்த அரசியல். குறைந்தபட்ச கூச்சம் கூட இல்லாமல் இந்த அரசியல்வாதிகள் எப்படி, இப்படி பேசுகிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. எதைக் கொடுத்தாலும் நாங்கள் உண்ணுவோம் என்பது அல்ல. இதைத் தான் மனிதன் உண்ண வேண்டும் என்ற ஒன்று இருக்கிறது. அப்படி சிந்திக்கின்ற போது எதை உண்ணப்போகிறாம் நாம்..? மத்திய அரசு எதை தந்தாலும் அதற்காக என் மாணவர்களை தயார் செய்வேன் என்கிற கல்வி அமைச்சரின் விளக்கம் மிகக் கொடுமையானது" என்றார்.