பல்லாவரம் அருகே துக்க நிகழ்வுக்கு வந்த மூதாட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரம் அடுத்த மன்சில் தெருவை சேர்ந்தவ சையத் என்பவரின் தந்தை இறந்து விட்டதால், அவரின் உறவினரான காயல்பட்டினத்தைச் சேர்ந்த 68 வயதான பாத்திமா இறுதிச்சசடங்கில் கலந்துகொண்டு அங்கு தங்கியுள்ளார்.
இதனையடுத்து, நேற்று இரவு வீட்டின் இரண்டாவது மாடியினை தூய்மை செய்து கொண்டிருந்த போது மிதியடி ஒன்று கீழே சென்ற மின் கம்பியில் விழுந்து தொங்கிக் கொண்டிருந்தது. அதனை எடுக்க முயன்றார் பாத்திமா. அப்போது, எதிர்பாராத விதமாக உரசியதில் பாத்திமா மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு பலத்த தீகாயத்துடன் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 50% தீக்காயம் ஏற்பட்ட நிலையில் பாத்திமா உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.