டிரெண்டிங்

கோவில்பட்டியில் டிடிவி தினகரன் போட்டி: 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அமமுக

கோவில்பட்டியில் டிடிவி தினகரன் போட்டி: 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அமமுக

webteam

அமமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. கோவில்பட்டியில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் அமமுக போட்டியிடவுள்ள தொகுதிகளின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 50 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது அமமுக. இதில் முக்கியமாக கோவில்பட்டியில் டிடிவி தினகரன் போட்டியிடவுள்ளார். அந்த தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜு போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்த ராஜவர்மனுக்கு சாத்தூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது