டிரெண்டிங்

மேலும் இரண்டு கட்சிகளுக்கு அமமுக தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு

மேலும் இரண்டு கட்சிகளுக்கு அமமுக தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு

Sinekadhara

மருது சேனை சங்கம், கோகுல மக்கள் கட்சிக்கு தலா 1 தொகுதியை ஒதுக்க அமமுக கூட்டணியில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த தினகரன், கூட்டணி கட்சிகளுடன் பேசிக்கொண்டிருப்பதாகவும், விரைவில் அதுகுறித்து தகவல் வெளியிடுவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மருது சேனை சங்கம் மதுரை மாவட்ட திருமங்கலம் தொகுதியிலும், கோகுல மக்கள் கட்சி கிருஷ்ணகிரி மாவட்ட தளி தொகுதியிலும் போட்டியிடும் என அமமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அமமுக கட்சியானது நேற்று ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகளை ஒதுக்கிய நிலையில், இன்று 2 கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கியுள்ளது. மற்ற தொகுதிகளில் அமமுக தனித்து போடியிடுமா அல்லது கூட்டணி அமைக்குமா என்பது குறித்தும், வேட்பாளர் பட்டியல் குறித்தும் நாளை தகவல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.