டிரெண்டிங்

அதிமுக வேட்பாளர் விதிமுறை மீறல் : அமமுக வேட்பாளர் புகார்

அதிமுக வேட்பாளர் விதிமுறை மீறல் : அமமுக வேட்பாளர் புகார்

webteam

மதுரையில் வாக்குப்பதிவு செய்யும் இடத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரித்தது விதிமுறை மீறல் என அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

மதுரை மக்களவைத் தேர்தலையொட்டி காவல்துறையினருக்கான தபால் வாக்குப் பதிவு மீனாட்சி மகளிர் கல்லூரி நடைபெற்று வருகின்றது. இதனை அமமுக கழக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தபால் வாக்கு பதிவு நடைபெற்று கொண்டிருக்கும் இடத்திற்கு அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் நேரில் வந்து வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்தது விதிமுறை மீறல் எனக் கூறினார்.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும், நாங்கள் வேட்புமனுத் தாக்கல் செய்த நாளிலிருந்து நடந்தால் வழக்கு பதிவு, நின்றால் வழக்கு பதிவு என போடப்படுகின்றது. இதுகுறித்த தேர்தல் ஆணையமும். மாவட்ட நிர்வாகமும் என்ன நடவடிக்கை எடுக்கின்றது என பார்போம் என அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை தெரிவித்தார். இதுகுறித்து தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.