குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் ஆதரவை கோரும் நடவடிக்கைகளில் பாரதிய ஜனதா குழு ஈடுபட்டுள்ளது.
மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், வெங்கய்ய நாயுடு ஆகியோர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர். குடியரத் தலைவர் தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் நிறுத்தப்படும் பொதுவேட்பாளரை ஆதரிக்குமாறு சோனியாவிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செலாளர் சீதாராம் யெச்சூரியையும் பாரதிய ஜனதா குழு சந்தித்து ஆதரவு கோரியது. குடியரசுத் தலைவர் பதவிக்கு பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வரும் 23ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மாநிலக் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து பாரதிய ஜனதா ஆதரவு திரட்டி வருகிறது.