டிரெண்டிங்

ஏன் பொய்களை பரப்புகிறீர்கள் அமித்ஷா?: சந்திரபாபு நாயுடு கேள்வி

ஏன் பொய்களை பரப்புகிறீர்கள் அமித்ஷா?: சந்திரபாபு நாயுடு கேள்வி

rajakannan

பாஜக தலைவர் அமித்ஷா கூறியுள்ளது அனைத்து பொய்களே என்று ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு விமர்சித்துள்ளார்.

சந்திரபாபு நாயுடுவுக்கு அமித்ஷா எழுதியுள்ள கடிதத்தில், “மாநில நலன் மீது பாஜக அரசு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என தெலுங்கு தேசம் கட்சி கூறுவது பொய் மற்றும் அடிப்படை ஆதாரமில்லாதது. பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது துரதிஷ்டவசமானது, ஒருதலைப்பட்சமானது. ஆந்திர மாநிலத்தில் பின் தங்கியுள்ள 7 மாவட்டங்களில் வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ.1050 கோடி சிறப்பு வளர்ச்சி நிதி அளித்தது. இதில் 12 சதவீதம் தொகை மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 88 சதவீதம் நிதி செலவிடப்படாமல் உள்ளது" எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், அமித்ஷா தமது கடிதத்தில் கூறியுள்ளவை அனைத்தும் முற்றிலும் பொய்யான தகவல்கள் என சந்திர பாபு நாயுடு பதிலடி கொடுத்துள்ளார். அமித்ஷா கடிதம் குறித்து அவர் கூறுகையில், “பொய்யான தகவல்களை கொடுப்பது அவர்களது சுபாபவத்தை காட்டுகிறது. தற்பொழுது வடகிழக்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு சிறப்பு நிதிகளை வழங்குகிறது. அப்படி ஆந்திர பிரதேசத்திற்கு சிறப்பு நிதிகள் வழங்கப்பட்டிருந்தால், நிறைய தொழிற்சாலையில் இங்கு அமைந்திருக்கும்” என்று கூறினார்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு வஞ்சித்துவிட்டதாகக் கூறி, சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலங்கு தேசக் கட்சி பாஜக கூட்டணியில் இருந்து கடந்த மார்ச் 16ம் தேதி விலகியது. இதனையடுத்து பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.அதோடு, நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகிறது.