டிரெண்டிங்

துளிர்க்கும் நம்பிக்கை: மக்களுக்கு உதவ ரூ.50,000 நன்கொடை அளித்த அமெரிக்க வாழ் தமிழர்!

துளிர்க்கும் நம்பிக்கை: மக்களுக்கு உதவ ரூ.50,000 நன்கொடை அளித்த அமெரிக்க வாழ் தமிழர்!

நிவேதா ஜெகராஜா

கொரோனா பேரிடரால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவி செய்யும் வகையில், புதிய தலைமுறை துளிர்க்கும் நம்பிக்கை இயக்கம் தொடங்கப்பட்டு ஏராளமான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு உறுதுணையாக இருக்கும்வகையில், பொதுமக்கள், தன்னார்வலர்கள், வெளிநாடு வாழ் தமிழர்கள் என பலரும் தங்களால் ஆன உதவிகளை செய்துவருகின்றனர்.

அந்தவகையில், அமெரிக்காவில் ஓஹியோவில் வசிக்கும் அமெரிக்க வாழ் தமிழர் கார்த்திகேயன் முனியப்பனின் குடும்பத்தினர் 50 ஆயிரம் ரூபாயும், வளைகுடா நாடான குவைத்தில் இருந்து முரளி பாபு சந்த் குடும்பத்தினர் 6,000 ரூபாயும், வெளிநாடு வாழ் தமிழரான சதீஷ் குமார் பத்தாயிரம் ரூபாயும் துளிர்க்கும் நம்பிக்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கைகளுக்கு உதவ, கிடைத்திருக்கும் சிறு உதவி இது. எளியவர்களை கரை சேர்க்க எங்களின் இந்த பணியில், உதவும் வகையில் எங்களுடன் நீங்களும் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.

உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க... 'புதிய தலைமுறை' முன்னெடுப்பில் 'துளிர்க்கும் நம்பிக்கை'