பயங்கரவாதம் முதல் பருவநிலை மாறுபாடு தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
போர் தவிர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக யாங்கோனில் நடைபெறும் இரண்டு நாள் 'சம்வாத்' மாநாட்டிற்கு அனுப்பியுள்ள காணொலி செய்தியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 21-ஆம் நூற்றாண்டில் உலகம் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருவதாகவும், விவாதம் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும் என்று தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இயற்கையை பாதுகாப்பதன் அவசியத்தை மனித குலம் உணர வேண்டும் என்றும், இல்லையெனில் பேரழிவைச் சந்திக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.