புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர், கூடியிருந்த மக்களை மாமா, மச்சான், தங்கை எனக் கூறி கலகலப்பாக வாக்கு சேகரித்தது கலகலப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் போட்டி போட்டு பரப்புரை செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் பிரசாரம் செய்த அதிமுக வேட்பாளர் தர்ம.தங்கவேல் கூடியிருந்த மக்களை மாமா, மச்சான், தங்கை எனக்கூறி கலகலப்பாக வாக்கு சேகரித்தது கலகலப்பை ஏற்படுத்தியது.
அப்போது பேசிய அவர், “ அதிமுக அரசு பெண் குழந்தை கருவுற்று வயிற்றில் இருக்கும்போது தொடங்கி திருமணமாகி மீண்டும் கருவுற்று அவளுக்கு குழந்தை பிறக்கும் வரை பல்வேறு திட்டங்களை கொடுத்தது. திருமணமாகி செல்லும் பெண்களை நாத்தனார் கேள்வி கேட்காமல் இருக்க சீர் வழங்கும் திட்டத்தை அறிவித்தது அதிமுக.
இந்தக்காலத்துப் பெண்களுக்கு விறகடுப்பில் சமைக்கத் தெரியாததால் ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்களையும், துணி துவைக்க தெரியாததால் வாஷிங் மெஷினையும் கொடுக்கிறோம்” என்றார். அவர் பிராசாரம் செய்தபோது கூடியிருந்த மக்களை மாமா, மச்சான், தங்கை எனக் கூறி கலகலப்பாக வாக்கு சேகரித்தது கலகலப்பை ஏற்படுத்தியது.