டிரெண்டிங்

சுதந்திர தினத்திற்குள் அதிமுக அணிகள் இணைய வாய்ப்பு: ஜெயக்குமார்

சுதந்திர தினத்திற்குள் அதிமுக அணிகள் இணைய வாய்ப்பு: ஜெயக்குமார்

Rasus

சுதந்திர தினத்துக்குள் அதிமுக அணிகள் இணைப்புக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சசிகலா குடும்பத்தை அதிமுக-விலிருந்து விலக்கி வைத்தால்தான் அதிமுக அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தையே நடைபெறும் என ஓபிஎஸ் அணி தொடர்ச்சியாக சொல்லி வரும் நிலையில், முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற அதிமுக அம்மா அணியின் ஆலோசனைக் கூட்டத்தில் டிடிவி தினகரனின் அறிவிப்புகள் கட்சியை எந்தவிதத்திலும் பாதிக்காது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
அதேசமயம் பேச்சுவார்த்தைக்கு தங்கள் தரப்பு கதவு எப்போதும் திறந்து இருப்பதாகவும் ஈபிஎஸ் அணி கூறியுள்ளது. இதனால் டிடிவி தினகரனை ஒதுக்கிவைத்து விட்டு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் விரைவில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சுதந்திர தினமான வரும் 15-ஆம் தேதிக்குள் அதிமுக அணிகள் இணைப்புக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.