டிரெண்டிங்

அதிமுகவில் விருப்பமனு விநியோகம் தொடங்கியது

அதிமுகவில் விருப்பமனு விநியோகம் தொடங்கியது

webteam

தமிழகத்தில் மீதமிருக்கும் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட, விருப்ப மனு விநியோகம் இன்று தொடங்கியது. 

தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 18 தொகுதிகளுக்கான தேர்தல் மக்களவைத் தேர்தலுடன் கடந்த 18 ஆம் தேதி நடந்து முடிந்துவிட்டன.

சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மே 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்பாளர்களை திமுக அறிவித்துவிட்டது.

இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் இன்று விநியோகிப்படும் என்று அதிமுக ஒருங்கி ணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர்.

விருப்ப மனுக்களை இன்றைய தினமே பூர்த்தி செய்து தர வேண்டுமென்றும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த விருப்ப மனுக்கள் வழங்கப்படுமென்றும், 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தனர். அதன்படி இன்று விருப்ப மனு விநியோகம் தொடங்கியது.