டிரெண்டிங்

ஆக.28ல் அதிமுக எம்.பி, எம்.எல்.ஏ, நிர்வாகிகள் கூட்டம்

ஆக.28ல் அதிமுக எம்.பி, எம்.எல்.ஏ, நிர்வாகிகள் கூட்டம்

webteam

அதிமுகவின் எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டம் சென்னையில் வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. 

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி ஏற்ப‌ட்டுள்ள சூழலில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும், அதிமுக பொதுக்குழுவைக் கூட்டுவது குறித்தும் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. 

அதற்காக, எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படிருப்பதாகத் தெரிகிறது. முன்னதாக, நேற்று சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் பழனிசாமிக்கான ஆதரவை வாபஸ் பெற்ற தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை செய்து பேரவைத் தலைவர் தனபாலிடம், அரசு கொறடா ராஜேந்திரன் நேற்று மனு அளித்திருந்தார். அதற்கு ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்குமாறு 19 எம்.எல்‌ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப பேரவைத் தலைவர் உத்தரவிட்டிருந்தார்.