டிரெண்டிங்

4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு

4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு

webteam

ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

4 தொகுதிகளில் போட்டியிட அதிமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் நேர்காணல் நடத்தினர். 

இடைத்தேர்தலில் போட்டியிட 300 பேர் விருப்பமனு பெற்ற நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட விண்ணப்பித்த மறைந்த எம்எல்ஏ ஏ.கே.போஸின் மனைவி பாக்கியலட்சுமி, முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம், சினிமா பைனான்சியர் ‌அன்புச்செழியன் உள்ளிட்டோரிடம் நேர்காணல் நடை‌பெற்றது. இதேபோல் அரவக்குறிச்சியில் போட்டியிட‌ விண்ணப்பித்த நிர்மலா பெரியசாமி உள்ளிட்டோரிடமும் நேர்காணல் நடத்தினர். 

நேர்காணல் நிறைவுபெற்ற நிலையில்‌ இன்று மாலை இடைத்தேர்தல் தொடர்பாக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், செய்தித் தொடர்பாளர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ‌ஆலோசனை நடத்துகின்றனர். இந்த ஆலோசனைக்குப் பின்னர் வேட்பாளர் பட்டியில் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.