அதிமுக பொதுச்செயலாளர் யார் என்பது பற்றி இதுவரை முடிவெடுக்கவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஓபிஎஸ் அணியின் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த அஸ்பயர் சுவாமிநாதன் என்பவர், அதிமுகவின் பொதுச்செயலாளர் யார், அவர் எப்போது, யாரால் நியமனம் செய்யப்பட்டார்? துணைப் பொதுச்செயலாளர் யார்? என்பது உள்ளிட்ட 5 கேள்விகளைத் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணையத்திடம் எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்பதை இன்னமும் தீர்மானிக்கவில்லை என்றும் அணிகளுக்கு இடையே பூசல் நீடிப்பதாகவும் பதிலளித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தில் இந்தப்பதிலால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், சசிகலா பொதுச்செயலாளர் இல்லை என்றால் அவரால் நியமனம் செய்யப்பட்ட துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதவிக்கும் மதிப்பில்லை என்று கூறப்படுகிறது.