அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பு குறித்து முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் அணியை சேர்ந்த கே.சி.பழனிச்சாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளார். நேற்று இரு அணிகளின் இணைப்புக்கு சாத்தியம் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது.
இந்த சந்திப்பு எதேச்சையான சந்திப்புதான் என கூறிய கே.சி.பழனிசாமி, எடப்பாடி பழனிசாமியிடம் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளார். இரு அணிகளும் இணைய வேண்டும் என பன்னீர்செல்வத்தோடு ஒத்த கருத்து கொண்டிருப்பதை போல் செயல்பாட்டிலும் ஒத்துபோக வேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கே.சி.பழனிச்சாமி கூறினார்.
எடப்பாடி பழனிசாமி அரசின் மீதான குட்கா குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் ஒருபக்கம் போராட்டம் நடத்தப்பட்டிருக்கும் நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.