நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக பாஜக இடையே கூட்டணி உறுதியாகத நிலையில், முக்கிய தலைவர்களுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தி வருகிறார்.
நேற்று அதிமுக கூட்டணி ஒரு வடிவம் பெறும் என்று சொல்லிவந்த நிலையில், அதிமுக பாஜக கூட்டணி இதுவரை இறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு கடலூர், விழுப்புரம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டது. அதை தொடர்ந்து சென்னை பாஜக அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், துணை தலைவர் வி.பி.துரைசாமி, பொது செயலாளர் கரு.நாகராஜன் ஆகியோர் ஆலோசனை செய்து வருகிறார்கள்.
அதிகப்படியான இடங்களை அதிமுகவிடம் பாஜக கேட்பதால் கூட்டணியில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பதாக சொல்லப்படுகிறது. எனவே தற்போது நடைபெறும் ஆலோசனையில் தனித்து போட்டியிடலாமா என்றும் விவாதிக்கப்படுகிறது. இந்த ஆலோசனைக்கு பின்னர் ஒரு முக்கிய முடிவை பாஜக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.