ஜெயலலிதா படத்துடன் கூடிய கொடியை தினகரன் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பயன்படுத்த தடை கோரி அதிமுக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. தினகரன் அறிமுகப்படுத்தியுள்ள கொடி, அதிமுகவின் கட்சிக் கொடியை போல் இருப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே மாதிரி கொடி இருப்பதால், அது தொண்டர்களை குழப்பமடைய செய்யும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மதுரை மேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் , ஆர்கே நகர் எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியையும் , அதன் கொடியையும் அறிமுகப்படுத்தி இருந்தார்