டிரெண்டிங்

இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே பொறுப்பாளர்களை நியமித்த அதிமுக..!

இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே பொறுப்பாளர்களை நியமித்த அதிமுக..!

Rasus

இடைத்தேர்தலுக்காக அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

முதலமைச்சர் பழனிசாமியை மாற்றவேண்டும் என ஆளுநரை சந்தித்த டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்களை, பேரவைத் தலைவர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.  இதனை எதிர்த்து அவர்கள் சென்னை உய்ர்நீதிமன்றத்தை நாடினர். அப்போது 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கத்தை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதனையடுத்து அந்த 18 தொகுதிகளும் காலியாக உள்ளன. அதேபோல திருவாரூர் தொகுதி எம்எல்ஏ கருணாநிதி, மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ போஸ் மரணம் காரணமாக அந்த தொகுதிகளும் எம்எல்ஏக்கள் இல்லாமல் காலியாக உள்ளன. இந்த 20 தொகுதிகளுக்கும் எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் வரலாம் எனத் தெரிகிறது.

இந்நிலையில் இடைத்தேர்தலுக்காக அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 20 தொகுதிகளுக்கான தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர். இடைத்தேர்தல் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் அதற்கு முன்னதாகே அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.