டிரெண்டிங்

அதிமுக ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கக் கூடாது: ஓபிஎஸ்

அதிமுக ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கக் கூடாது: ஓபிஎஸ்

rajakannan

அதிமுக ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடக்கூடாது என்பதற்காக இரு அணிகளாக பிரிய நேரிட்டது என துணை முதலமைச்சர்‌ ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அறிஞர் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் இவ்வாறு கூறினார். மேலும், “பிரிவுக்கு பிறகு நாம் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு வலுவான அதிமுகவாக இருக்கிறோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எந்த நோக்கத்தில் கட்சியை தொடங்கினார்களோ அதன் அடிப்படையில் செயல்படுகிறோம்” என்றார்.

அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது. இந்த இயக்கத்தை வெற்றி கொள்வதற்கு, கபளீகரம் செய்வதற்கு யாரும் பிறக்கவில்லை என்று கூறினார்.