அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக உயர்நிலை இன்று சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதலமைச்சரும், இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். ஓபிஎஸ், ஈபிஎஸ் வருகையின்போது ஆதரவாளர்கள் தனித்தனியாக வாழ்த்து முழக்கம் எழுப்பினர்.
இந்நிலையில் அதிமுகவின் செயற்குழு கூட்டம் வரும் 28ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் சார்பில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதன்படி, வரும் 28ஆம் தேதி காலை 9.45 மணிக்கு சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் தொடங்கும் எனவும், கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.