டிரெண்டிங்

நாளை அதிமுக நிர்வாகிகள் கூட்டம்: சசிகலாவை நீக்க நடவடிக்கை?

நாளை அதிமுக நிர்வாகிகள் கூட்டம்: சசிகலாவை நீக்க நடவடிக்கை?

Rasus

சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கும் வகையில் அக்கட்சியின் சட்டவிதிகளில் முக்கிய மாற்றங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளின் கூட்டம், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை வகிப்பார் என்றும் கூறப்படுகிறது. இதில் சசிகலாவை கட்சி பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இதன்மூலம் ஓ.பன்னீர்செல்வம் அணியின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று நிறைவேற்றப்படும் எனவும் அதிமுக நிர்வாகிகள் கூறுகின்றனர்.

ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்று ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.