காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து அதிமுக மாநிலங்களவை எம்.பி. முத்துகருப்பன் நாளை ராஜினாமா கடிதம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் கடிதத்தை அளிக்கிறார் முத்துக் கருப்பன்.
சமீபத்தில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முத்துகருப்பன், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காத போது எம்.பி பதவி எதற்கு?. காவிரிக்காக போராடிய ஜெயலலிதா அளித்த பதவியை ராஜினாமா செய்வதில் மகிழ்ச்சி” என்று கூறினார்.
முன்னதாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால். தற்கொலை கொள்வோம் என அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணன் மாநிலங்களைவையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.