டிரெண்டிங்

அமைச்சர் பங்கேற்ற அரசு விழாவைப் புறக்கணித்த ஆளும்கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்கள்

அமைச்சர் பங்கேற்ற அரசு விழாவைப் புறக்கணித்த ஆளும்கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்கள்

webteam

கடலூரில் ந‌டைபெற்ற அரசு வி‌ழாவை, 4 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ‌மற்றும்‌ 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள்‌  புறக்கணித்தனர். 

அமைச்சர் சம்பத் தலைமையில் அரசு நலத்திட்ட நிகழ்ச்சி மற்றும் சாதனை விளக்க‌ புத்தக வெளியீட்டு விழா‌  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில், கடலூர் எம்.பி. அருண்மொழித்தேவன், சிதம்பரம் எம்.பி  சந்திரகாசி ஆகியோர் ‌கலந்து‌கொள்ளவில்லை. மேலும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சத்தியா பன்னீர்செல்வம்,  பண்டியன், கலைச்செல்வன், முருகுமாறன் ஆகியோரும் விழாவை புறக்கணித்தனர்.