டிரெண்டிங்

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ. தங்கத்தமிழ்ச்செல்வன் வெளிநடப்பு

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ. தங்கத்தமிழ்ச்செல்வன் வெளிநடப்பு

webteam

ஆண்டிப்பட்டி தொகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்காததைக் கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ. தங்கத்தமிழ்ச்செல்வன் வெளிநடப்பு செய்தார்.

இன்று சட்டப்பேரவையில் மதுவிலக்கு ஆயத்தீர்வை குறித்த விவாதம் நடந்தது. டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான தங்கத்தமிழ்ச்செல்வன், ஆண்டிப்பட்டி தொகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்காததைக் கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்வதாகக் கூறியுள்ளார். தொகுதி நலன் சார்ந்து அவர் வெளிநடப்பு செய்ததாக அறிவித்திருந்தாலும், ஒரு ஆளும்கட்சி எம்.எல்.ஏ. வெளிநடப்பு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது கோரிக்கையை சுகாதாரத்துறை கண்டுகொள்ளாததால் அதைக் கண்டிக்கும் விதமாக அவையில் இருந்து வெளியேறியதாகக் கூறினார். அரசைக் கண்டித்து ஆளும் கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் வெளியேறி இருப்பது தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் இதுவே முதல்முறை.