டிரெண்டிங்

ஆள் நான்தான்....குரல் என்னுடையதில்லை....வீடியோ சர்ச்சைக்கு சரவணன் எம்எல்ஏ விளக்கம்

ஆள் நான்தான்....குரல் என்னுடையதில்லை....வீடியோ சர்ச்சைக்கு சரவணன் எம்எல்ஏ விளக்கம்

webteam

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்க பணம் கொடுக்கப்பட்டதாக வெளியான வீடியோ காட்சி போலியானது என மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக கிரிமினல் வழக்கு தொடர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு செல்லாமல் இருக்க கூவத்தூரில் தங்கியிருந்த எம்எல்ஏக்களுக்கு பணம் தரப்பட்டதாக மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் பேசியதாக வீடியோ பதிவு ஒன்று நேற்று வெளியானது. தனியார் தொலைக்காட்சி வெளியிட்ட இந்த வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ சரவணன், "இந்த வீடியோ போலியானது. வீடியோவில் இருப்பது நான் தான். அது வேறு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது எடுக்கப்பட்டது. ஆனால் அது என் குரல் அல்ல. யாரோ என் குரலை டப் செய்து வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் கேட்டிருந்தார். அவருக்கு உரிய விளக்கத்தை அளித்துள்ளேன். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற பிற கட்சி எம்எல்ஏக்களுக்கு ரூ.10 கோடி பேரம் பேசப்பட்டது எனவும் வீடியோவில் இருக்கிறது. நான் அவர்களை பற்றியும் எதுவும் பேசவில்லை. இந்த விவகாரம் தொடர்பான சட்ட வல்லுனர்களுடன் விரிவாக ஆலோசித்து வருகிறேன். கூடிய விரைவில் கிரிமினல் வழக்கு தொடர்வேன்" என்றார்.