பரபரப்பான சூழலில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைபாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் காலை 10 மணி அளவில் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வரும் 8ம் தேதி சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திமுக திட்டமிட்டுள்ளது. ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தினகரன் சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். இந்த நிலையில் சட்டப்பேரவையில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.