டிரெண்டிங்

அணி மாறியது ஏன்? ஆறுக்குட்டி விளக்கம்

webteam

ஓ.பன்னீர்செல்வம் அணி புறக்கணிக்க ஆரம்பித்ததால் முதலமைச்சர் பழனிசாமி அணியில் இணைந்ததாக ஆறுக்குட்டி எம்எல்ஏ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகிய ஆறுக்குட்டி எம்எல்ஏ சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக அம்மா அணியில் இணைந்தார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆறுக்குட்டி, "எனது கவுண்டம்பாளையம் தொகுதிக்கு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி தந்துள்ளார். இதற்காக சட்டப்பேரவையில் முதல்வருக்கு நன்றி தெரிவித்தால் ஓ.பன்னீர்செல்வம் அணி என்னை புறக்கணித்தது. என்னை அழைக்காமல் ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தை நடத்தினார். அழைக்காதது ஏன் என கேட்டதற்கு ஓபிஎஸ் அணியில் இருந்து எந்த பதிலும் சரியாக வரவில்லை. முதலமைச்சர் தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுகவின் இரு அணிகளும் இணையும் வாய்ப்பு இல்லாததால் எடப்பாடி பழனிசாமி அணியில் சேர்ந்தேன்" ஆறுக்குட்டி கூறினார்.

அதிமுக அணிகள் இரண்டாக பிரிந்தபோது ஓபிஎஸ் அணிக்கு முதலில் சென்றவர் ஆறுக்குட்டி எம்எல்ஏ. தற்போது அந்த அணியில் இருந்து முதல் ஆளாக வெளியேறியுள்ளார். ஆறுக்குட்டி விலகலால் ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 11ஆக குறைந்துள்ளது.