இந்த ஆட்சியிலும், இதற்கு முந்தைய அதிமுக ஆட்சியிலும் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேறியதா? எத்தனை திட்டங்கள் நிலுவையில் இருக்கின்றன என்பது குறித்து அறிந்துகொள்ள வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றைய சட்டப்பேரவை நடவடிக்கை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் 110 விதியினைப் பயன்படுத்தி அவையில் அறிவித்த உறுதிமொழிகள், வாக்குறுதிகள் எல்லாம் எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன, எவையெல்லாம் நிலுவையில் இருக்கின்றன, எத்தனை அரசாணைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன என்று கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், இந்த ஆட்சியிலும், இதற்கு முந்தைய அதிமுக ஆட்சியிலும் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேறியதா? எத்தனை திட்டங்கள் நிலுவையில் இருக்கின்றன என்பது குறித்து அறிந்துகொள்ள வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே, மக்கள் தேர்ந்தெடுத்து சட்டமன்றம் அனுப்பி வைத்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்த உண்மை நிலைபற்றி தெரிந்துகொள்ள இந்தக் கூட்டத்தொடரில் வெள்ளை அறிக்கை வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.