டிரெண்டிங்

அதிமுக ஆட்சி ஐந்தாண்டுகளை பூர்த்தி செய்யும்: ஆர்.பி.உதயகுமார் உறுதி

அதிமுக ஆட்சி ஐந்தாண்டுகளை பூர்த்தி செய்யும்: ஆர்.பி.உதயகுமார் உறுதி

Rasus

எத்தனை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தாலும், அதிமுக ஆட்சி ஐந்தாண்டுகளை நூறு சதவிகிதம் பூர்த்தி செய்யும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

தமிழ்நாடு யோகா சங்கம் சார்பில் மதுரை திருப்பரங்குன்றம் மன்னர் கல்லூரியில் மாநில அளவிலான யோகா போட்டிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கினார். பின்னர் பேசிய அமைச்சர், " புதுச்சேரியில் தங்கியுள்ள 19 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அதிமுக ஆட்சியை காக்க வேண்டும் என்பது நன்றாகத் தெரியும். ஒருதாய் வயிற்றில் பிறந்த தாயில்லா பிள்ளைகள் கருத்து வேறுபாடுகளை முன்வைப்பதில் தவறில்லை. எத்தனை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தாலும், அதிமுக ஆட்சி ஐந்தாண்டுகளை நூறு சதவிகிதம் பூர்த்தி செய்யும் " என்றார்.