டிரெண்டிங்

அதிமுக செயற்குழு கூட்டம், இன்று நடக்கிறது!

அதிமுக செயற்குழு கூட்டம், இன்று நடக்கிறது!

webteam

அதிமுக செயற்குழுக் கூட்டம் இன்று மாலை நடைபெறும் என்று அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி உயிரிழந்தார். கருணாநிதி மறைவைத் தொடர்ந்து திமுகவின் அவசர செயற்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 14ம் தேதி நடைப்பெற்றது. அடுத்ததாக திமுக பொதுக்குழுக்கூட்டம் வரும் 28ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிமுக செயற்குழு கூட்டம் கடந்த 20ம் தேதி நடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான  எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்திருந்தனர். 

ஆனால் முன்னால் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16ஆம் தேதி மரணம் அடைந்ததால், அதிமுக செயற்குழு கூட்டம் 23-ம் தேதி நடக்கும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்தது. அதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்தில் இன்று மாலை 4 மணிக்கு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., இணைந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் இக்கூட்டம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அடுத்து வரவுள்ள உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல் பற்றியான முக்கிய விவாதங்கள் இந்தக் கூட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.