டிரெண்டிங்

ஆர்.கே.நகரில் அதிமுக டெபாசிட் வாங்காது: ஸ்டாலின்

ஆர்.கே.நகரில் அதிமுக டெபாசிட் வாங்காது: ஸ்டாலின்

Rasus

கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் ஆர்.கே.நகரில் அதிமுக டெபாசிட் பெறாது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான பரப்புரை நாளை மறுதினம் மாலையுடன் ஓயவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. ஆர்.கே.நகரில் திமுக சார்பில் போட்டியிடும் மருதுகணேஷை ஆதரித்து அக்கட்சியின் செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கோடி கோடியாக கொட்டிக்கொடுத்தாலும், உருண்டு புரண்டாலும் ஆர்.கே.நகரில் அதிமுக டெபாசிட் பெறாது என திட்டவட்டமாக தெரிவித்தார். அதிமுகவில் ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா என மூன்று குழல் துப்பாக்கி உள்ளதாக விமர்சித்த அவர், ஆர்.கே.நகரில் தேர்தலை சந்திக்க எந்த நிலையிலும் திமுக தயாராக இருப்பதாகவும் கூறினார். தேர்தலை நிறுத்த வேண்டும் என தாம் கூறவில்லை எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டார். சில மாதங்களில் வரும் பொதுத்தேர்தலுக்கு ஆர்.கே.நகர் தேர்தல் பயன்படும் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

தற்போது அதிமுக ஆட்சி நடைபெறுகிறது. எனவே இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பின் நடைபெறும் இடைத்தேர்தல் என்பதால் திமுகவிற்கும் இத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.