டிரெண்டிங்

கருணாநிதியுடன் அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

கருணாநிதியுடன் அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

rajakannan

அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

சென்னைக்கு சமீபத்தில் வருகை தந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இது தமிழகம் மட்டுமல்லாமல் தேசிய அளவிலான அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மோடியின் சந்திப்புக்கு பிறகு, நல்லக்கண்ணு, திருநாவுக்கரசர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்கள் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆளும் அதிமுகவின் தோழமை கட்சி சட்டமன்ற உறுப்பினர்களான கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் கருணாநிதியை இன்று கோபாலபுரம் இல்லத்தில் சென்று சந்தித்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிமுன் அன்சாரி, கருணாநிதி முழுமையாக குணமடைந்து அவரது குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும் என்று கூறினார். மேலும், பாச உணர்வோடு திமுக தலைவரை சந்தித்தோம். எங்களை பார்த்த உடன் கையை உயர்த்தி வாழ்த்து தெரிவித்தார் என்று கூறினார்.