டிரெண்டிங்

அதிமுகவில் நிர்வாக மாற்றங்கள்? ஐவர் குழு திடீர் ஆலோசனை

அதிமுகவில் நிர்வாக மாற்றங்கள்? ஐவர் குழு திடீர் ஆலோசனை

webteam

அதிமுகவில் நிர்வாக ரீதியிலான மாற்றங்கள் குறித்து அமைச்சர்கள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினர் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி கட்சியின் மூத்த நிர்வாகிகள் வைத்தியலிங்கம், கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் அடங்கிய ஐவர் குழு திடீர் ஆலோசனையில் ஈடுபட்டனர். நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய ஆலோசனை 4 மணி நேரம் நீடித்தது.

நிர்வாக வசதிக்காக கட்சியில் மாவட்டங்களை பிரிப்பது, புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை தேர்வு செய்வது குறித்த பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இந்த ஐவர் குழு அளிக்கும் பரிந்துரைகளின் படி கட்சியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும் என கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.