டிரெண்டிங்

மும்பை வடக்குத் தொகுதியில் நடிகை ஊர்மிளா போட்டி : காங்கிரஸ் அறிவிப்பு!

webteam

கடந்த 27 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த நடிகை ஊர்மிளா மடோன்கர், மும்பை வடக்குத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள் ளார்.

தமிழில், கமல்ஹாசன் நடித்த ’சாணக்கியன்’, ’இந்தியன்’ படங்களில் நடித்தவர் பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர். ராம் கோபால் இயக் கிய ’ரங்கீலா’, ‘சத்யா’ உட்பட ஏராளமான ஹிட் படங்களில் நடித்துள்ள ஊர்மிளா, மலையாளம், கன்னடம், மராத்தி படங்களிலும் நடித்துள்ளார்.

இப்போது அரசியல் கட்சிகள், நடிகர், நடிகைகளை கட்சிக்குள் இழுத்து வருகின்றன. அந்த வகையில் இவரை காங்கிரஸ், தங்கள் கட்சிக்கு இழுத்துள்ளது. மும்பை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சஞ்சய் நிரூபத்தை நடிகை ஊர்மிளா சந்தித்து காங்கிரஸ் கட்சியில் சேர சம்மதம் தெரிவித்திருந்தார். இதையடுத்து கடந்த 27 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து காங்கிரஸில் இணைந்தார் ஊர்மிளா. ராகுல்காந்தி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் ஊர்மிளா கூறும்போது, “நான் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மீது நம்பிக்கை கொண்டவள். எனவே தான் இக்கட்சியில் இணைந்து ள்ளேன். தேர்தலுக்காக அல்ல. மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல் ஆகியோரின் கொள்கைகள் அடிப்படையில் அரசியல் கருத்துகளை வடிவமைத்த குடும்பத்தை சேர்ந்தவள் நான்” என்றார். அவர் மும்பை வடக்கு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட் பாளராக நிறுத்தப்படுவார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் எதிர்பார்த்ததை போலவே, இதை இதை காங்கிரஸ் கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, மும்பை வடக்கு தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் முகுல் வாஸ்னிக் இதைத் தெரிவித்துள்ளார்.