டிரெண்டிங்

அரசியலுக்கு வந்தால்தான் அரசியல் புரியும்: சரத்குமார்

அரசியலுக்கு வந்தால்தான் அரசியல் புரியும்: சரத்குமார்

webteam

கமல்ஹாசன் அரசியலுக்கு வந்த பிறகுதான் அரசியல் என்ன என்பது தெரியும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் நூறு நாட்களில் தேர்தல் வந்தாலும் அதனை தனியாகவே சந்திக்கப் போவதாக கமல்ஹாசன் கூறியிருந்தார். இதுவரை மறைமுகமாக பேசி வந்த கமல், அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு தெளிவான கருத்துக்களை சில தினங்களுக்கு முன் தெரிவித்தார். இதற்கு நடிகர்களும் அரசியல் தலைவர்களும் பல விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார், கமல்ஹாசன் அரசியலுக்கு வந்த பிறகுதான் அரசியல் என்ன என்பது தெரியும். முதல்வராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என கூறுபவர்கள், சேவை செய்து விட்டு முதல்வராகலாம் எனவும் கூறியுள்ளார்.