டிரெண்டிங்

ரஜினி எனக்கு ஆதரவு தருவார்: குஷ்பு

ரஜினி எனக்கு ஆதரவு தருவார்: குஷ்பு

jagadeesh

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஆதரவு கேட்கவில்லை என்றாலும், அவர் தனக்கே ஆதரவு அளிப்பார் என நம்புவதாக, பாஜக வேட்பாளரும், நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் நடிகை குஷ்பு, வேட்புமனு தாக்கல் செய்தார். சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் வள்ளுவர் கோட்டத்தில் இருந்து புறப்பட்ட அவர், நுங்கம்பாக்கம் மாநகராட்சி மண்டல அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தடைந்தார்.

மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளோடு, மேளதாளம் முழங்க ஊர்வலம் களைகட்டியது. வேட்புமனுதாக்கலுக்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு, தோல்வி என்ற வார்த்தையே தமது அகராதியில் இல்லை எனக் கூறினார். பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மையினருக்கு எதிரானதுபோல் பொய் பரப்புரை செய்யப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.