டிரெண்டிங்

ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து

Rasus

நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

பலத்த எதிர்பார்ப்புக்கிடையே அரசியலில் ஈடுபடப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் இன்று அறிவித்தார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்கள் முன்னிலையில் இதனை அவர் அறிவித்தார். மேலும், தனிக்கட்சி தொடங்கி, வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இதனையடுத்து ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் பல அரசியல் தலைவர்களும் ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “என்னை வாழ்த்திய, என்னை வாழ வைக்கும்  தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த  நன்றிகள். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.