டிரெண்டிங்

“நதிகளை இணைப்போம் என்ற பாஜகவின் தேர்தல் வாக்குறுதி வரவேற்கத்தக்கது”- நடிகர் ரஜினி

“நதிகளை இணைப்போம் என்ற பாஜகவின் தேர்தல் வாக்குறுதி வரவேற்கத்தக்கது”- நடிகர் ரஜினி

Rasus

பாஜக தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு குறித்து தெரிவித்துள்ளதை வரவேற்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மக்களவை தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆதரவு அளிப்பீர்களா..? என்ற கேள்விக்கு “ என்னுடைய அரசியல் நிலைபாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அதனை ஏற்கெனவே கூறிவிட்டேன். ஊடகங்கள் இந்த விஷயத்தை பெரிதுபடுத்தி எனக்கும் கமலுக்கும் இடையே உள்ள நட்பை கெடுத்துவிடாதீர்கள்.

நதிகள் இணைப்பு திட்டத்திற்கு பகீரத் என பெயர் வைக்க வேண்டும் என ஏற்கெனவே வாஜ்பாயிடம் வலியுறுத்தியிருந்தேன். தற்போது நதிகள் இணைப்புக்கு தனி அமைச்சகம் என பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. நதிகளை இணைத்தால் நாட்டில் இருந்து வறுமை போய்விடும். பல கோடி மக்களுக்கு வேலை கிடைக்கும். நதிகளை இணைத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும். பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முதலில் நதிகளை இணைக்க வேண்டும். தேர்தல் நேரம் என்பதால் அதிகம் பேச விரும்பவில்லை” என தெரிவித்தார்.