டிரெண்டிங்

கருணாநிதியை சந்தித்து ஆசிபெற்றேன்: ரஜினி

கருணாநிதியை சந்தித்து ஆசிபெற்றேன்: ரஜினி

rajakannan

திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த நடிகர் ரஜினி காந்த், அரசியல் பிரவேசத்திற்கு ஆசிபெற்றார். 

தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை டிசம்பர் 31-ம் தேதி ரஜினி வெளியிட்டார். அறிவிப்பு வெளியானது முதல் ரஜினி அடுத்தடுத்து பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார். நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். 

இந்நிலையில் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை ரஜினி சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது, கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தார். புத்தாண்டு வாழ்த்தையும் தெரிவித்தார். இந்தச் சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “புத்தாண்டு நல்வாழ்த்துகள் சொல்லி நலம் விசாரித்தேன். அரசியல் பிரவேசம் குறித்து சொல்லி ஆசி பெற்றேன்” என்று கூறினார்.