டிரெண்டிங்

ரஜினி கட்சி கொடிக்கு துணி கிடைக்கவில்லையா? ராதாரவி கேள்வி!

ரஜினி கட்சி கொடிக்கு துணி கிடைக்கவில்லையா? ராதாரவி கேள்வி!

webteam

ரஜினிகாந்த் கட்சியை ஏன் இன்னும் தொடங்கவில்லை? நடிகர் ராதாரவி கேள்வி எழுப்பியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையில், திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ராதாரவி, “ரஜினி கட்சியை ஏன்? இன்னும் தொடங்கவில்லை. கட்சி கொடிக்கு துணி கிடைக்கவில்லையா? ஜெயலலிதா இருக்கும் போது அமைதியாக இருந்துவிட்டு, தற்போது வெற்றிடம் இருப்பதாக பேசுகிறார்கள். தமிழகத்தில் வெற்றிடம் ஒன்றும் இல்லை. கருணாநிதி இருப்பதை ரஜினி மறந்துவிட்டாரா?” என்று பல கேள்விகளை எழுப்பினார்.

சில நாட்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், தமிழகத்தில் வெற்றிடம் இருப்பது உண்மை தான் என்றார். அத்துடன் அந்த வெற்றிடத்தை நிரப்பவே தான் அரசியலுக்கு வருவதாகவும் தெரிவித்திருந்தார். இதைக்குறிப்பிட்டுப் பேசி, ராதாரவி ரஜினியை விமர்சித்துள்ளத்தார்.