டிரெண்டிங்

"கொடுத்த வாக்குறுதிகள் என்னவானது?" - பிரகாஷ்ராஜ்

"கொடுத்த வாக்குறுதிகள் என்னவானது?" - பிரகாஷ்ராஜ்

webteam

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தினால் தான் பாரதிய ஜனதா கட்சியையும், பிர‌தமர் மோடியையும் எதிர்ப்பதாக‌ நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறையின் அக்னிப்பரீட்சை நிகழ்ச்சியில் நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வன் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்.

மேலும் அவர் பேசுகையில், பிரதமர் மோடியுடன் எனக்கு ஏதாவது தனிப்பட்ட பிரச்னை‌‌யா? சொத்து பிரச்னை உள்ளதா? என கேள்வி எழுப்பினார். ஆட்சிக்கு வந்த நான்கு வருடங்களில் மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள்? எனவும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதிநிதியாக பிரதம‌ர் மோடி செயல்படுகிறார் எனவும் தெரிவித்தார்.

பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் இவ்வாறு எதிர்த்து நிற்கவில்லை எனவும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதால் தான் இப்போது எதிர்க்கிறோம் எனவும் குறிப்பிட்டார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாகவும் கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவருக்கும் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்ச‌ம் செலுத்தப்படும் என மோடி அரசு உறுதி அளித்ததாக தெரிவித்தார்.

இதனால் பிரதமர் மக்களின் பிரச்னைக‌ளை புரிந்து கொண்டவர் என்று நினைத்தோம் என குறிப்பிட்ட பிரகாஷ்ராஜ் வாக்குறுதிகள் அனைத்தும் பொய் என்று பின்னர் தானே தெரிந்தது என தெரிவித்தார்.