திண்டுக்கல்லில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான் குப்பைகளை அகற்றி நூதன முறையில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக நடிகர் மன்சூர் அலிகான் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் சாலையோரம் உள்ள குப்பைகளை நாம் தமிழர் கட்சித் தொண்டர்களின் உதவியுடன் அப்புறப்படுத்தி நூதன முறையில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது துப்புரவு பணியாளர்கள் கால தாமதமாக வந்ததை கேட்டறிந்தார். மேலும், வாக்களிப்பதன் அவசியத்தையும் அங்கிருந்த மக்களிடம் தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக வலியுறுத்தினார். அப்போது அங்கு கூடியிருந்த மக்களிடம் நகைச்சுவையாக ‘ஓட்டு போட்டலனா ஒரே போடாக போட்டு விடுவேன்’ என்று நகைச்சுவையாக பேசி சிரிக்க வைத்தார்.